30.05.2024 அன்று காட்டாங்குளத்தூர், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் , உன்னத் பாரத் அபியான் மற்றும் தமிழ்ப்பேராயம் - பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் சார்பில்  உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இணையவழியில் கவிதை மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. தமிழ்ப்பேராயத்தின் தலைவர் கலைமாமணி முனைவர் கரு. நாகராசன் அவர்கள் போட்டிகளை தொடங்கிவைத்து நோக்கவுரை வழங்கினார். பா.வே.மா..மன்றத்தின் ஆசிரியஒருங்கிணைப்பாளர் திரு. மு. பாலசுப்பிரமணி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  கவிதைப் போட்டியின் நடுவராக எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணைப் பேராசிரியர் முனைவர் யாழினி முனுசாமி அவர்கள் மற்றும் பேச்சுப் போட்டியின்  நடுவராக எஸ்.ஆர்.எம். மேலாண்மையியல் புலம் துணைப் பேராசிரியை முனைவர். மகேஸ்வரி அவர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் பல்வேறு துறை மாணவ - மாணவிகள் மற்றும் ஆய்வறிஞர்கள் கலந்து கொண்டு போட்டியை மேலும் சிறப்பித்தனர்.

 31.05.2024 அன்று இணையவழியில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு 500 ரூபாய், இரண்டாம் பரிசு 300 ரூபாய், மூன்றாம் பரிசு 200 ரூபாய் என்னும் விதத்தில் பரிசுகள்  வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தமிழ்ப்பேராயத் தலைவர் கலைமாமணி முனைவர் கரு. நாகராசன் அவர்கள் மற்றும் எஸ்.ஆர்.எம்.‌ பல்கலைக்கழக வளாக வாழ்வு இணை இயக்குநர்  முனைவர் . திருமுருகன்அவர்கள், பா.வே.மா.. மன்றம் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் திரு. மு. பாலசுப்பிரமணிஅவர்கள், தமிழ்ப்பேராய துணைப் பேராசிரியர் முனைவர் ஜே. ஜெகத்ரட்சகன் அவர்கள் ,பா.வே.மா..மன்றம் பொறுப்பாளர்கள் மற்றும்பல்வேறு துறை மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

பேச்சுப் போட்டி வெற்றியாளர்கள்:

v  முதல் பரிசு            :  மு. பூஜா   5th  B.A LLB, SRM LAW

v  இரண்டாம்பரிசு :  வை. வர்ஷா  2nd  OT, SRM AHS

v  மூன்றாம் பரிசு    :  து. சுதர்சன்   3rd  BCA , SRM CSH

கவிதைப் போட்டி வெற்றியாளர்கள்:

v  முதல் பரிசு            :  .‌ கிருத்திகா   2nd  OT, SRM AHS

v  இரண்டாம் பரிசு :  இரா. பிரபாகரன்   3rd   LLB, SRM LAW

v  மூன்றாம் பரிசு    :  மு. ராமமூர்த்தி  3rd  B.tech (Mech) , SRM E&TShare to All

0 comments:

Post a Comment

 
Top