உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் உழவர் பயிற்சி

எஸ்ஆர்எம் கல்விக் குழுமம் உன்னத் பாரத் அபியான் என்னும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் 12 கிராமங்களை  தத்தெடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக  தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் மின்னல் சித்தாமூர் கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒருநாள் உழவர் பயிற்சியை இன்று (29.12.2025) நடத்தினர். 

இந்நிகழ்வில் எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் திட்ட பொறுப்பாளர் முனைவர்.அ. அன்பரசன் வரவேற்புறை நல்கினார். உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளரான முனைவர் திருமுருகன் அவர்கள் தலைமை உரையாற்றினார்.  எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. ஜவஹர்லால்  அவர்கள் சிறப்புரையாற்றினார். முனைவர் கண்ணன் உதவிப்பேராசிரியர் காய்கறி சாகுபடியில்  அறிவியல் யுக்திகளை விளக்கினார். திரு காமராஜ் உதவிப்பேராசிரியர்  பூச்சி தாக்குதல் மற்றும் மேலாண்மை குறித்தும் முனைவர் ரெக்ஸ் பயிர்களில் நோய் தாக்குதல் குறித்தும் செயல் விளக்கமளித்தனர். பயிர் காப்பீடு திட்டத்தின் முக்கியத்துவம் குறித்த சந்தேகங்களுக்கு முனைவர் துளசிராம் அவர்கள் பதிலளித்தார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளரான முனைவர் மகேந்திரன் நன்றியுரையாற்றினார். இறுதியாக திரு பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் அணைத்து உன்னத் பாரத் அபியான் திட்ட அலுவலர்களுக்கும், எஸ்ஆர்எம் கல்விக்குழுமத்திற்கும்  ஊர் பொதுமக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தார்.

































Share to All

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

 
Top