எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயம் மற்றும் எஸ்.ஆர்.எம். உன்னத் பாரத் அபியான் இணைந்து இணையவழியிலான  ‘கொரானாவை வெற்றி கொள்வோம்’ என்ற கருத்தரங்கைத்தை 14.06.2021 திங்கள் கிழமை அன்று மாலை 3 மணியளவில்  நடத்தியது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள், வெளிநாடு மற்றும் உள்நாட்டில்  இருந்து பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்ட இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன வளாக வாழ்வின் இணை இயக்குநரும், எஸ்.ஆர்.எம். உன்னத் பாரத் அபியான் அமைப்பின் திட்ட அலுவலருமான முனைவர் வ. திருமுருகன் அவர்கள் உன்னத் பாரத் அபியான் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்ததோடு சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். 




தலைமையுரையாற்றிய தமிழ்ப்பேராயத்தின் தலைவர் முனைவர் கரு. நாகராசன் அவர்கள் இந்த பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட வாழ்வியல் சிக்கல்கள் குறித்து எடுத்துரைத்தார்.  சிறப்பு விருந்தினராக  மருத்துவ இலக்கிய மாமணி, பாரதி பணிச்செல்வர்  மருத்துவர் கு. கணேசன் அவர்கள் பங்கேற்றார். சிறப்பு விருந்தினர் தமது உரையில் கொரானா எங்கிருந்து உருவானது, அது பரவும் விதம், அதனால் ஏற்படும் பாதிப்பு, கொரானாவில் இருந்து நம்மைக் காக்கும் வழிமுறைகள், கொரானா அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துமனை செல்லுதலின் அவசியம், முகக் கவசம் அணியும் முறை மற்றும் அதன் முக்கியத்துவம், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவதின் பயன், தனிமனித இடைவெளியின்  தேவை  போன்றவை குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். மேலும், மக்கள் அனைவரும் தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

பாரதி பணிச்செல்வர்  மருத்துவர் கு. கணேசன்

பொதுமக்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்த இந்நிகழ்வில் முனைவர் ஜே. ஜெகத்ரட்சகன் அவர்கள் நிறைவாக நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியைத் திரு மு. பாலசுப்பிரமணி அவர்கள் தொகுத்து வழங்கினார். உலக இரத்ததான தினமான 14.06.21 அன்று  நடைபெற்ற இந்த கொரானா விழிப்புணர்வு நிகழ்வு 

youtube-இல் நேரலையில் ஒளிப்பரப்பானது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/AwxGiUzGLzA



Share to All

0 comments:

Post a Comment

 
Top